மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனைத் தட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், நடிகர் சிவகுமார் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY