ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து… அப்போலோ நி்ர்வாகம், ”அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு இதயஅடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்துவிட்டதாக அதே மருத்துவமனை மூலம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், அவர் மரணம்வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது அனைத்து தரப்பு மக்களையும் கேள்விக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணியினர்கூட, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தனர். மத்திய அரசிடமும் சசிகலா புஷ்பா எம்.பி-யும்… ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்களும் மனு அளித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

LEAVE A REPLY