தென்காசியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா, தன் நண்பர் முஸ்தபாவுடன் இணைந்து “பசியில்லா தென்காசி” என்னும் அமைப்பை உருவாக்கி, சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார். கிழிசலான அழுக்கு உடையுடனும், பலநாள்கள் வெட்டாத தலைமுடியுடனும், யாரும் அருகில் நெருங்கவே தயங்கும் மனிதர்களுக்குத் தலைமுடி வெட்டி, குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்து, போர்த்திக்கொள்ள போர்வை கொடுத்து அன்பாகப் பராமரித்தும் வருகிறார்.

LEAVE A REPLY