காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது, விவசாயிகளுக்கான போராட்டமாகக் கருதப்படாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் வயிற்றுக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஏப்ரல் 8) அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றுப் பேசினர். அதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், “ராணுவமே வந்தாலும் அஞ்சவேண்டாம். அனைவரும் ஒற்றுமையாகப் போராடுவோம்” என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY